உணவுச் சங்கிலியும் வெட்டுக்கிளிகளும்
உணவுச் சங்கிலி(Food chain) என்பது ஒரு குறிப்பிட்ட
வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவு
தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலி தொடர்பு. இதில் ஏதேனும் ஒரு தொடர்பு துண்டிக்கப்பட்டால் நம் வாழ் சூழல் பாதிக்கப்படும். இதற்கான எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஆகும்.
பருவகால மாற்றம், வெப்பநிலை மாற்றம், போன்றவை
வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு காரணமாகிறது. இருப்பினும்
உணவுச் சங்கிலியின் பாதிப்பே தூண்டுகோலாக இருக்கிறது. தவளை, பாம்பு, தரை வண்டுகள், பறவை இனங்கள், ஆகியவைவெட்டுக்கிளிகளின் எதிரிகள் ஆகும். ஆனால் இவற்றின்
வாழ்விடங்களை நகர்மயமாதல் என்ற பெயரில் மனிதர்கள்
அழித்துவிட்டனர். எனவே, இயற்கையை பாதுகாத்து, அதனுடன்
இணைந்து வாழும் பறவை இனங்கள், காட்டுயிர்களையும்
காப்பாற்றினால் உணவுச் சுழற்சி விடுபடாது. இதற்கான சாலச்சிறந்தது எடுத்துக்காட்டுதான் அமுர் பால்கன் எனும் பருந்து வகையை சேர்ந்த பறவை இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாகலாந்துக்கு இப்பறவைகள் வலசை வரும். இதன் பிரதான உணவே ஈசல், வெட்டுக்கிளி போன்ற பூச்சியினங்கள் தான். அதிலும் வெட்டுக்கிளிகள் பறந்து வரும்போது பிடித்து சாப்பிட்டு விடும் தன்மையுடையது இப்பறவை. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கூந்தன்குளம் விஜயநாராயணம் ஏரி வறண்டு புல் முளைத்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான அமுர் பால்கன்கள் அந்த ஏரியில் குவிந்ததை காணமுடிந்தது. மனிதர்கள் இவற்றை உணவுக்காக வேட்டையாடியதனால் இப்பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. பறவையினத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதை உணர்த்திய சம்பவம் இது. அமுர் பால்கன், ஆரியர் போன்ற பூச்சிகளை பிடிக்கும் பருந்து வகைப் பறவைகள் எண்ணிக்கை
குறைந்துவிட்டது, என தி னேச்சர் டிரஸ்ட் (The Nature Trust) அமைப்பின் பறவை ஆர்வலர் திருநாரணன் கூறினார். இதேபோன்று கருப்பு டிராங்கோ அல்லது ரெட்டைவால் குருவி, இந்திய ரோலர் ஜாய், மரங்கொத்தி பறவை, மாங்குயில், போன்றவை வெட்டுக்கிளிகளை உண்ணும் பறவைகள் ஆகும். இதில் குறிப்பாக ரெட்டைவால் குருவி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை சாப்பிடுமாம். இதுவே உணவு சங்கிலியின் முக்கிய பங்காகும்.
எனவே பூமியானது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, பூச்சிகள்,
பறவைகள், விலங்குகள், செடிகொடிகள் ஆகியவற்றிற்கும் வாழ்விடம் ஆகும். மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, மற்ற உயிர்களை அழிப்பது, அவர்களுடைய அழிவிற்கே வழிவகுக்கும், என்பதை இதன் மூலம் உணரமுடியும். “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே” என்று கண்ணதாசன் கூறுவதுபோல், தன்னிடம் இருப்பதை வைத்து இன்புற்று வாழ வேண்டும். உயிரினச் சங்கிலியைச் சிதைத்து விடாமல், “அனைத்து உயிரும் இன்புற்று வாழவேண்டும் பராபரமே” என்று தாயுமானவர் மற்றும் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் சிந்தனையோடு தன்னிடம் இருப்பதை வைத்து சிறப்பாக வாழ வேண்டும். பூமிப்பந்தினை பொதுவில் வைத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டும் என்பதே இந்த
தலையங்கத்தின் நோக்கமாகும்.
ஆதாரம் : https://m.dinakaran.com/article/news-detail/590690
தொகுப்பு: அ.சாய் மதுமிதா & உ.சினேஹா, மூன்றாம் ஆண்டு,
இளங்கலை வேளாண்மை, குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஈரோடு.
மின்னஞ்சல்: [email protected]
& [email protected] .