☀️ஒரு விவசாயி விதைநெல் வாங்க போனால் கடை காரர்கள் சொல்லும் விலைக்கு வாங்க வேண்டுமாம்!

☀️விவாசயி நாற்றாங்கால் வைத்தால் வரப்பு வைத்து களைஎடுக்க வரும் வேலையால் சொல்லும் கூலி கொடுக்க வேண்டுமாம்!

☀️விவசாயி ஒரு வயலை உழுது சமன் செய்ய உழவு வண்டிகாரர் சொல்லும் கூலியை கொடுக்க வேண்டுமாம்!

☀️விவசாயி ஒரு வயலை நடுவதற்கு நடவு ஆள் சொல்லும் கூலியை கொடுக்க வேண்டுமாம்!

☀️விவசாயி அந்த வயலுக்கு தேவையான உரம், பூச்சிமருந்து போன்றவற்றை வாங்க சென்றால் கடைகார்கள் சொல்லும் விலையை கொடுக்க வேண்டுமாம்.

☀️விவசாயி வாங்கிய உரம் ,பூச்சி மருந்து போன்றவற்றை அந்த வயலுக்கு இட கூலி ஆட்கள் சொல்லும் கூலியை கொடுக்கவேண்டும்!

☀️விவசாயி இப்படி எல்லா செலவுகளையும் செய்து வறட்சி, வெள்ளம் எல்லாவற்றையும் சமாளித்து அறுவடைக்கு வரும் போது அறுவடை வண்டிகாரர் சொல்லும் கூலியை அறுவடை செய்ய கொடுக்க வேண்டுமாம்!

✳️இவற்றை எல்லாம் தாண்டி அறுவடை முடிந்த பிறகு அந்த நெல்லை விவசாயி விற்க வேண்டுமென்றால் அப்போது கூட அந்த விவசாயி அந்த நெல்லுக்கு விலை சொல்லமுடியாத நிலையில் வியாபாரியும், அரசாங்கமும் சொல்லும் விலைக்கு தான் விற்கவேண்டுமென்ற நிலை. ஏன் இந்த கீழ்நிலை..?

இப்படிக்கு

?விளைவித்த பொருளுக்கு விலை பேச முடியாத விவசாயி

#வயலோடும்வறட்சியானவரப்போடும்

– அபிநந்தன்.ச.