வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டிருந்தன. பிறைச்சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தை போலப்பவனி வந்து கொண்டு இருந்த ஓர் அழகான இரவு நேரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது .

அந்த காரில் ‘இசைஞானி’ இளையராஜாவின்
“செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே செந்தூர்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே …..
என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
அழகான இயற்கை, ஜில்லென்ற காற்று, இளையாராஜாவின் பாடல் என்று அந்த கார் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு சிக்னல் ஒன்று வருகிறது. ஒரு பிச்சைக்காரன் காரின் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்கிறான். அந்த காரில் இருப்பவன் பாக்கெட்டில் இருந்த சில்லறையை எடுத்து பிச்சைக்காரனிடம் கொடுக்கிறான். அந்த சிறு பிச்சைக்காரனின்பெயர் குமரன். ஒருவள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடித்து கொண்டு பல சிறு பிச்சைக்கார்களிடம், அவர்கள் பிச்சை எடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கிறாள். அப்பொழுது ஒரு சிறுவன் 30 ரூபாய் தான் பிச்சை எடுத்து கொண்டு வருகிறான். ஆனால் அவள் எல்லோரும் ஒரு நாளைக்கு 50 ரூபாய் பிச்சை எடுத்து வரவேண்டும் என்று கட்டளை செய்து இருக்கிறாள். இந்த சிறுவனிடம் 30 ரூபாய் தான் இருக்கிறது. அதனால்‌, அவள் பிடித்து கொண்டு இருந்த சிகரெட்டை அந்த சிறுவன் கையில் சூடு வைத்து அவனை அடிக்கிறாள். அவள் அதற்கு பிறகு எல்லா சிறுவர்களிடமும் தினமும் கண்டிப்பாக 50 ரூபாய் பிச்சை எடுக்க வேண்டும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்று மிரட்டி விட்டு செல்கிறாள். அடுத்த நாள் குமரன் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறான். அப்பொழுது இரு கல்லூரி மாணவர்கள் டீ குடித்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு வந்த குமரன் மயக்கம் போட்டு கீழே விழுகிறான். உடனடியாக கல்லூரி மாணவர்கள் அவனை மயக்கத்தில் இருந்து எழுப்பி விட்டு அவனிடம் “டேய் தம்பி என்ன ஆச்சு” என கேட்கிறார்கள். அதற்கு, “நேற்று இரவு சாப்பிட்டது அதுதான் மயக்கம் வந்துருச்சு” என்றான். பிறகு கல்லூரி மாணவர்கள் குமரனுக்கு டீ வாங்கி கொடுத்து அவர்களும் குடித்து கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு இருந்த செய்திதாளை ஒரு கல்லூரி மாணவன் படித்துகொண்டு இருக்கிறான். எல்லையில் ராணுவ வீர்கள் தீவரவாதிகளால் சுட்டுக் கொலை என்று படித்த உடன், “ஏன்டா மச்சா பணத்த நிறையா சம்பாதிப்பது, லெளவ் பண்ணீகிட்டு வாழ்க்கைய ஜாலிய என்ஜாய் பண்றத விட்டுட்டு ஏன்டா இப்படி போய் சாவராங்க” என்று சூர்யா கூறியதற்கு சரண் “அவ்வளோ மோசமான பனியில் நல்ல சாப்பாடு இல்லாம அவங்க குடும்பத்த பாக்காம நமக்கு எல்லாம் ஏதுவும் ஆக கூடாதுங்ற காதல் தான் அவங்கள இப்படி இருக்கவைக்குது‌ .

ஆனா இப்ப பாரு அவங்க குடும்பத்த பாத்துகருக்கு கூட யாருமே இல்ல” என்று வருத்தமாக கூறிவிட்டு, டீக்கு காசு கொடுத்து விட்டு செல்கிறார்கள். இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்து குமரன் பின்பு தொடர்ந்து சென்று பிச்சை கேட்கிறான். சூர்யா சில்லறையை தேடி பிறகு சில்லறை இல்லை என்று சொல்கிறான் . அதற்கு குமரன் “அண்ணா காசு தாங்கனா; இல்லான என்னைய அடிப்பாங்கனா!”என்று கூற , அதற்கு சரண் “டேய் அதா இல்லனு சொல்றானல்ல; போடா! ” என்று கோபத்துடன் சொல்கிறான். அதற்கு பிறகு சூர்யா “ஏன்டா மச்சா காசு தர வேண்டாம்” என்று கேட்டான். “அவனுக்கு காசு கொடுத்த அவனை ஒரு நாள் தான் காப்பற்ற முடியும்; ஆனால் அதே 1098க்கு கால் செய்தால் அவன் வாழ்க்கையை காப்பற்ற முடியும்” என்று சரண் கூறினான். “ஏன்டா 1 ரூபாய் என்ன வந்தர போகுது உங்கிட்ட கொஞ்ச கூட கருணையே இல்லடா” என்று சூர்யா கூறியதற்கு, “டேய் இந்த கருணைக்கு பின்னாடிதா பெரிய தவறு எல்ல நடக்குது” என்று பேசிக்கொண்டு செல்கிறார்கள். அந்த நாள் சாயங்காலம் எல்லாரும் பிச்சை எடுத்து பணத்தை அவளிடம் தந்து கொண்டு இருக்கிறார்கள். குமரன் 40 ரூபாய் தான் தருகிறான். மீதி 10 ரூபாய் எங்கே என்று கேட்டு மிக மோசமாக அடித்து விட்டு செல்கிறாள். குமரனுக்கு பலமாக அடிபட்டு விடுகிறது. அதை பொருட்டுபடுத்தமால் கடைக்கு சென்று அவனிடம் இருந்த காசை கொடுத்து இரண்டு கொடி வாங்கி ஒரு இடத்திற்கு சென்று சவப்பெட்டி வடிவில் மண்ணை குவித்து அங்கு கொடி நட்டு சல்யூட் செய்து உயிர் இழந்த இராணுவ வீர்களுக்கு மரியாதை செய்கிறான் … (வருடத்தில் இரண்டு தினம் மட்டும் நெஞ்சில் சுமந்து ஆடம்பரமான பிச்சைக்காரனாய் வாழ்வதை விட , தினமும் நெஞ்சில் சுமந்து நேசமான இந்தியா இராணுவ வீர்களை போல வாழ வேண்டும் என குமரனின் இந்த எளிமையான சில்ல(அறை) உணர்த்துகிறது …)

( இக்கதை இந்தியா இராணுவ வீர்களுக்கு சமர்ப்பணம் ) …