பார்த்தீனியம் – பாரெல்லாம் அதன் பரவலும் கட்டுப்படுத்தும் முறைகளும்
பார்த்தீனியம் என்பது அறிமுகமே தேவைப்படாத ஒரு நச்சுக் களையாகும். கேரட்/காங்கிரஸ் களை என அழைக்கப்படும் இந்த விஷ பூண்டு 1950 களில் கோதுமை இறக்குமதியுடன் இந்தியாவிற்குள் ஊடுருவியது. 1956ல் இந்த மெக்சிகன் களை மகாராஷ்டிராவில் முதலில் கண்டறியப்பட்டது. சில வருடங்களிலேயே இந்தியா முழுவதும் பரவி பிரச்சினைக்குரிய களையாக உருவெடுத்தது.
வாழ்க்கைச் சுழற்சி – அசுர பரவலின் காரணம்:
● அனைத்து பருவங்களிலும் முளைக்கும் திறனுடையவை
பார்த்தீனியம் விதைகள்.
● தொடர்ச்சியாக விதை உற்பத்தி செய்யவல்லது பார்த்தீனியம்.
● ஒரு பார்த்தீனியச் செடி சுமார் 620 மில்லியன் மகரந்தங்களையும் 15,000 – 25,000 விதைகளையும் உற்பத்தி செய்யும்.
- கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
- 30 நாட்களில் முளைத்து, பூத்து, விதை உற்பத்தி செய்யும் திறன் உடையது.
- பனி மற்றும் வறட்சியால் பாதிக்கப்படுவதில்லை.
- ஒரு வருடத்திற்கு நான்கு தலைமுறைகள் வளரக்கூடியது.
பார்த்தீனியத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- மண் மற்றும் பயிர்:
- மண்ணிலிருந்து அதிக அளவு சத்துக்களை உறிஞ்சுவதால் மண்ணின் வளம் குறையும்.
- உடன் வளரும் பயிர்களைவிட ஓங்கி வளர்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
- பார்த்தீனியம் பல தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. இவற்றுள் முக்கியமானது பீனாலிக்ஸ் (Phenolics).
- பார்த்தீனியத்தில் நிறைந்த பார்த்தினின் என்ற வேதிப்பொருள் மற்ற பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும் (allelopathic effect).
- பார்த்தீனியத்தின் மற்ற வேதிப்பொருட்கள் பிற செடிகளின் முளைப்புத் திறனை பாதிப்பதால் மகசூல் குறையும்.
2. மனிதன்:
- கண் அரிப்பு
- தோல் அரிப்பு
- தோல் வெடிப்பு
- கொப்புளங்கள்
- ஆஸ்துமா
- மூச்சுத்திணறல்
- உடல் அழற்சி
- காய்ச்சல்
3. கால்நடை:
- மடி எரிச்சல்
- காய்ச்சல்
- வாய் மற்றும் சீரண உறுப்புகளில் புண்கள்.
கட்டுப்படுத்தும் முறை:
● பார்த்தீனியத்தை பூப்பதற்கு முன் அழிக்க வேண்டியது அவசியம்.
● பார்த்தீனியத்தை வேருடன் அகற்றுவதால் விதை பரவலை
குறைக்கலாம்.
● பார்த்தீனியத்தை அகற்றும்போது கையுறை அணிவது அவசியம்.
● வயல்களில் வேகமாக வளரும் பயிர்களான சோளம், கம்பு,
தக்கைப்பூண்டு முதலியவற்றை பயிரிட்டு பார்த்தீனியம்
வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
● களைக்கொல்லிகள் :
○ ரவண்டப் (Roundup) – 10 ml/L
○ பெர்னாக்சோன்(Fernoxone) – 5g/L
○ மெட்ரிபூசின் (Metribuzin) – 3-5ml/L
○ 2,4-D – (2-2.5 kg/ha)
○ அட்ரடாஃப் (Atratap) – 1 kg/ha (மழைக்காலத்திற்கு முன்பு
பயன்படுத்த வேண்டும்.)
● மேக்ஸிகன் வண்டுகளை (Mexican beetle – Zygogramma bicolorata) பயன்படுத்தி பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.
● தரிசு நிலங்களில் சாமந்தி அல்லது துத்தி பயிரிட்டு
பார்த்தீனியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம்.
● பார்த்தீனியத்தை பூ பூப்பதற்கு முன் வேருடன் பிடுங்கி மக்க வைத்து உரமாக பயன்படுத்தலாம்.
● மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்த
முறையினை கடைபிடித்தால் மட்டுமே பார்த்தீனியத்தை ஒழிக்க முடியும்.
நன்றி: https://www.dwr.icar.gov.in
தொகுப்பு: சக்திவேல். சி, மூன்றாம் ஆண்டு, இளங்கலை வேளாண்மை, குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஈரோடு.
மின்னஞ்சல்: [email protected].