“நீ உன்னை தெய்வமாக நினைத்தால் தெய்வத்திற்கும் தெய்வமாகிறாய்;

நீ உன்னை மனிதனாக நினைத்தால் மாமனிதனாகிறாய்;

நீ உன்னை மிருகமாக நினைத்தால் மிருகமாகிறாய்;

நீ உன்னை அரசனாக நினைத்தால் அரசனுக்கும் அரசனாகிறாய்;

நீ உன்னை தலைவனாக நினைத்தால் தலைவனுக்கும்  தலைவனாகிறாய்;

நீ உன்னை தர்மனாக நினைத்தால் தர்மத்தின் தலைமகனாகிறாய்;

நீ உன்னை குருவாக நினைத்தால் குருவுக்கும் குருவாகிறாய்;

நீ உன்னை சீடனாக நினைத்தால் சீடனாகிறாய்;

நீ உன்னை கவிஞனாக நினைத்தால் கவிஞனாகிறாய்;

நீ உன்னை முட்டாளாக நினைத்தால் முட்டாளாகிறாய்;

நீ உன்னை கருணைக் காரனாக நினைத்தால் கருணையின் கடவுளாகிறாய்;

நீ உன்னை நீராக நினைத்தால் நீராகிறாய்;

நீ உன்னை மண்ணாக நினைத்தால் மண்ணுடன் கலந்து மண்ணாகிறாய்;

நீ உன்னை காற்றாக நினைத்தால் தென்றலாகிறாய்;

நீ உன்னை நெருப்பாக நினைத்தால் சுடர்விட்டு எரியும் தீப்பிழம்பாகிறாய்;

நீ உன்னை பிணமாக என்று நினைத்தால் உயிரற்ற பிணமாகிறாய்;

ஆதலால் தான் சொல்கிறேன் ;

நீ என்ற சொல்லுக்கு நினைவுள்ளது;

நீ யார் என்று நினைத்துப் பார்;

நீ யார் என்று உணர்ந்து கொள்வாய்…….. ..”

– ரா.நிதிஷ் கிருஷ்ணா.