முன்னுரை:

அனைவருக்கும் வணக்கம்  இது குமரகுரு மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பன்னிரண்டாவது காணொளி(webinar) வகுப்பின் தொகுப்பாகும்

இந்த காணொளி தொகுப்பின் தலைப்பு “நிலையான  வேளாண்மையில் நுண்ணுயிரிகளின் பங்கு என்பதாகும்”

வரவேற்புரை:

முனைவர்.B.J. பாண்டியன்,

புதிதாய் மலர்ந்த முதல்வர்,

குமரகுரு வேளாண்மை கல்வி நிறுவனம்,

இந்த உலகம் தோன்றிய வரலாறை அதாவது இந்த உலகமானது நுண்ணுயிர்கள் தோன்றி இப்போது பெரு உயிரில் வந்து நிற்கிறது என்பதை எமது கல்லூரி முதல்வர் தனது காலத்தில் நடைபெறும் என்பதை மிக சூட்சுமமாய் சொல்லிவிட்டார்” .

சிறப்புரை:

முனைவர். பெரியசாமி பன்னீர்செல்வம்,

முதன்மை விஞ்ஞானி,

வேளாண் நுண்ணுயிரியல் துறை,

ICAR-தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம்

கட்டாக்.

யார் இவர் இவரைப் பற்றி மேலும் அறிய வேண்டுமா கீழே உள்ளதை தொட்டுப்பார் அறிந்து கொள்வாய்

https://drive.google.com/file/d/1KnjjUDW62DWZ1wFbXW1xIzgsAxLNbUYC/view?usp=drivesdk

அவர் கூறியதிலிருந்து நாங்கள் கற்றுக் கொண்டது என்னவென்றால் நுண்ணுயிரிகள் இந்த நிலப்பரப்பு சூழலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிர் பெருக்கம் மற்றும் உற்பத்திக்காக நாம் அளவுக்கு அதிகமாக கனிம உரங்களையும் பூச்சிக் கொல்லி , பூஞ்சை கொல்லி போன்றவற்றையும் பயன்படுத்தி வருகிறோம் . ஆனால் இது  நிலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் தொடர்ச்சியான இவற்றின் பயன்பாட்டால் மண்ணின் தரம் மிகவும் குறைகிறது. எனவே பயிர் பெருக்கம் மற்றும் உற்பத்திக்காக நாம் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம்.

  • மேலும் நிலையான வேளாண்மை என்பது நீர் சேமிப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை குறைத்தல்,
  • பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் பல்வகை தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது

இவர் அவரது குழுவினருடன் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் பெங்களூரில் அர்கா நுண்ணுயிர் கலவையை  உருவாக்கினார்.

இந்த நிகழ்நிலை வகுப்பின் மூலம் இந்தியாவில் உயிர் உரங்களின் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களை அறிய முடிந்தது.

உயிர் உரங்கள் பற்றிய வகைப்பாடு

பாஸ்பரஸ் அளிக்கும் உயிர் உரங்கள் :

  • ஆர்பஸ்குலார் மைக்கோரைசா,
  • எக்டோமைக்கோரைசா,
  • ஆர்கிட் மைக்கோரைசா.

தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோ பாக்டீரியா:

  • சூடோமோனாஸ்.

நுண் ஊட்டச் சத்துக் களாக பயன்படும் உயிர் உரங்கள்:

  • சிலிகேட் மற்றும் ஜிங்க் கரை பொருள்கள்

நைட்ரஜன் நிலைநிறுத்தும் உயிர் உரங்கள்:

  • அசட்டோபாக்டர்
  • ரைசோபியம்
  • அசோஸ்பைரில்லம்
  •  அனபீனா

தொடர்ந்து 47ஆண்டுகள் கனிம உரமான நைட்ரஜனை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள சையனோபாக்டீரியா மற்றும் டைஅசோட்ரோப்ஸ்(நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியா) எண்ணிக்கை குறைந்து விட்டது

நெல் வயல்களில் உள்ள புதிய வகை பாக்டீரியாவான  ஸ்கெர்மனெல்லா சிற்றினங்கள் நெற்பயிர்களுக்கு இலை சுருட்டு நோய் மற்றும் தண்டுத் துளைப்பான் நோயை கட்டுபடுத்த பயன்படுகிறது என தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் 

அர்கா நுண்ணுயிர் கலவை:

 பயிர் பெருக்கத்திற்கு தேவையான நைட்ரஜன் நிலைப்படுத்தி, பொட்டாசியம், ஜின்க் மற்றும் பாஸ்பரஸ் கரைப்பான் ,தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும்  நுண்ணுயிர்களை கொண்டுள்ளது

அர்கா நுண்ணுயிர் கலவை பயன்கள்:

  • விதைகள் முளைக்கும் திறனை விரைவுபடுத்துகிறது
  • நாற்றுக்களின் வீரியத்தை அதிகரிக்கிறது
  • பயிர் உற்பத்தியை 10 முதல் 16% வரை உயர்த்துகிறது
  • இது அதிக அளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிர்களில் பயன்படுகிறது
  • இது 25% வரை நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கனிம உரங்களின் பயன்பாட்டை குறைக்கிறது

அர்கா ஆக்டினோ பிளஸின் பயன்கள்:

  • நாற்றுக்களின் வீரியத்தை அதிகரிக்கிறது
  • நுண்ணூட்டம் மிக்க சுற்றுச்சூழலை தாவர வேர்களில் உருவாக்குகிறது
  • பயன் அளிக்கத்தக்க நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை மண்ணில் அதிகப்படுத்துகிறது
  • பயிருக்கு புத்துயிர் அளிக்கிறது
  •  கனிம உரங்களின் பயன்பாட்டை குறைக்கிறது
  • பயிர் விளைச்சலை 13 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துகிறது

அர்கா தென்னை  கழிவு:

  • குழித்தட்டு நாற்றங்கால் மூலம் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்ய மிகவும் சிறந்த ஊடகமாக விளங்குகிறது

மைக்கோரைசாவின் பணிகள்:

  •  மண்ணிலிருந்து தாவரங்களுக்குச் செல்லும் ஊட்டச்சத்துக்களின் வீதத்தை அதிகரிக்கிறது
  • ஊட்டச்சத்து சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது
  • தாவரங்களுக்கு நோய் மற்றும் வறட்சி தடுப்பாற்றலை அதிகரிக்கிறது
  • பயன் தரவல்ல நுண்ணுயிர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது

மேலும் இவரது குழுவினருடன் இவர் மண்ணில்லா முறையில் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சைகளை தனது ஆராய்ச்சி மூலம்  உற்பத்தி செய்தார்

வழி நடத்தியவர்:

முனைவர். மு. இனிய குமார்,

உதவிப் பேராசிரியர்வேளாண் நுண்ணுயிரியல்,

குமரகுரு வேளாண்மை கல்வி நிறுவனம்.

முடிவுரை:

இந்த உலகில் ஒரு உயிரினமானது தன் உணவிற்காக பிற உயிரினத்தின் மீதே சார்ந்திருக்கிறது ஆனால் ஓர் அறிவுள்ள தாவரங்களும் மரங்களும் மற்ற செடி வகைகளும் மட்டும் ரசாயன உரங்களை சார்ந்திருக்கிறது அதையும் பிற உயிர்கள் மீது சார்ந்திருக்கிறது என்பதை காட்டுவோம்

புரட்சியை உண்டாக்குவோம்

இப்படிக்கு:

ரா.நித்தீஷ்கிருஷ்ணா

மு.விமலா ஸ்ரீ

இரண்டாம் ஆண்டு