கணினி மயமான இந்த காலத்தில் விவசாயிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய, பயன்பெற்றுக் கொள்ள வேண்டிய வலைதளங்கள் மற்றும் செயலிகள்.

வலைதளங்கள்:

1.AgriTech Portal:

வேளாண் தொழில்நுட்பங்கள் எல்லாம் அறிந்து கொள்ள மிகவும் சிறந்த வலைதளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அக்ரிடெக் போர்டல்.

Agritech portal ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்.

2.Agrisnet:

இதுவே தமிழக அரசின் வேளாண் தளமாகும். இதில் தினமும் அணை நிலவரம், மழை அளவு, சந்தை நிலவரம், முதலியன பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்.

Agrisnet தளத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.

அணை நீர்மட்டம் அறிய  இங்கே அழுத்தவும்.

மாவட்ட வாரியாக மழை அளவு அறிய இங்கே அழுத்தவும்.

3.Eservices(Patta/Chitta):

தமிழ் நாட்டிலுள்ள  விவசாய  நிலங்களின் நில உரிமை (பட்டா /   சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்கள் அனைத்தும் இந்த தளத்தில் காணலாம்.

உங்கள் நிலத்தின் பட்டா/சிட்டாவை பதிவிறக்கி பயன்பெற இங்கே அழுத்தவும்.

4.Tnreginet

இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் இணையதளம் நமக்கு பயன்படும்.

உங்கள் நிலத்தின் வில்லங்க சான்றிதழை (EC) பதிவிறக்கி பயன்பெற இங்கே அழுத்தவும்.

5. PMKISAN

விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மிக பயனுள்ள திட்டங்களில் ஒன்று பிஎம்-கிஸான் என்று அறியப்படுகிற Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டம்.

 இதில் பதிவு செய்யவும் பண வரவை அறிந்து கொள்ளவும் இங்கே அழுத்தவும்.

செயலிகள்:

1.உழவன் செயலி:

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து உரக்கடைகள், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் தற்பொழுது இருப்பு நிலையில் உள்ள விதை, உரம் ஆகியவற்றின் விவரம், வேளாண்மை துறையில் உள்ள மானியத் திட்டங்கள், பயிர்காப்பீடு விவரம், சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, அணைகளின் நீர்மட்டம், வேளாண்மை செய்திகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான மேலாண்மை முறைகள் ஆகியவற்றை இச்செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

2. Expert system TNAU:

நெல், ராகி, கரும்பு, தென்னை, வாழை, கால்நடை ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் செயலி வடிவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் பற்றிய தகவல்கள் மற்றும் அதனை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

மேலும் உங்களுக்கு தெரிந்த வேளாண் தளங்களையும் செயலிகளையும் கீழே Commentல் பதிவிடவும்.