தமிழ் புகார்
என்றுமுள தென்தமிழே!!
என்றுமுள தென்தமிழே!!
என் நாவிலே நடனமாடும் என் செந்தமிழே;
மனிதனாக பிறந்த என்னை மனிதனாக பிறந்த என்னை தமிழனாக மற்றிய என் தங்க தமிழே;
பிறமொழிகளை பெற்றெடுத்த என் தாய் தமிழே;
சங்கம் வைத்து வளர்த்த என் சங்க தமிழே;
சங்கம் வைத்து வளர்த்த என்னைவிட்டு நீ கண்டம் தாண்டி செல்கிறாய்;
வளர்த்த என்னிடத்தில் வெறும் பேச்சாய் இருக்கிறாய்;
ஆனால் சென்ற இடத்திலோ உயிர் மூச்சாய் இருக்கிறாய்;
சென்ற இடத்தில் இருக்கும் அரசு உன்னை அரசு மொழி என அறிவித்ததும் நானோ மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்;
ஆனால் எனக்கு வந்த சோதனையோ உன்னை என் நாட்டிலே அரசு மொழி என அறிவிக்கவில்லை;
நாவிலே அமர்ந்து நாவினை நான்கு திசைக்கும் சுழல வைத்த தமிழே;
உன்னை!!
சங்கம் வைத்து வளர்த்தவன் வாழ்ந்ததும் இந்த நாட்டில் தான்;
பள்ளி கல்லூரியில் உனக்கு தடை விதிப்பவன் வாழ்வதும் இந்த நாட்டில்தான்;
உன்னை நினைத்து கையிலே எழுதுகோல் எடுத்தால் உன்னை நான் எழுதித் தீர்க்கிறேன்;
ஆனால்!
நானோ நான்கு திசை சென்று உன்னை உச்சரித்தால் என்னையோ அங்கேயே தீர்க்கிறான்;
என் நடையிலே நகர்ந்து;
என் அசைவினை அடைந்து;
என் அனுவிலே அமர்ந்து;
என் செங்குருதியிலே கலந்து;
என் நாவிலே நவிலும் தமிழே;
இது உன்னிடம் நான் கொடுக்கும் புகார்.