தமிழ் இன்றி இயங்குமா வேளாண்மை?
முன்னுரை:
அன்றோ இந்தப் பொண்ணாடாம் தமிழ்நாட்டில் வாயால் சொன்ன வாக்கே வேதவாக்காக கருதப்பட்டது அதனடிப்படையில் கூறவேண்டும் என்றால்
” நமது தமிழால் மட்டுமே இந்த வேளாண்மை மட்டுமல்ல இந்த உலகமே இயங்குகிறது என்று கூறலாம்”
ஆனால் இன்றோ அதைச் சொன்னால் “சான்று எங்கே?” என்று கேட்டு நம் எண்ணத்தையே மண்ணோடு மண்ணாய் போகச் செய்கிறார்கள் இந்த மனிதர்கள்
சான்று எனும் ஒன்றுக்காக பல சான்றுகள் கூறுகின்றேன் கேளுங்கள்….. .
திருக்குறள்:
வள்ளுவன் எழுதிய திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களுல் இந்த உலக நடப்புகள் அனைத்தும் அடங்கும் போது வேளாண்மை மட்டும் எப்படி விதிவிலக்காகும்
திருக்குறளின் அதிசயம் தெரியுமா? நண்பர்களே திருக்குறளின் அதிசியம் தெரியுமா உங்களுக்கு?
திருக்குறளின் முதல் குறட்பா உயிர் எழுத்தின் முதலெழுத்து ஆம் “அ” வில் தோன்றி திருக்குறளின் கடை குறட்பா மெய்யெழுத்தாம் “ன” முடிகிறது
அப்படி என்றால் வேளாண்மையும் உயிரெழுத்தாம் “அ” தோன்றி மெய்யெழுத்தாம் “ன”முடிகிறது என்பேன்…. .
கொல்லாமை:
அன்றோ நமது வள்ளுவன் திருக்குறளில் 33 ஆம் அதிகாரமாம் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் “உயிருள்ள ஜீவனைக் கொல்லாதே” என்று கூறிச் சென்றானே. இதிலிருந்து நாம் அறியலாம் நம் தமிழன் அன்றோ கால்நடைகளைப் பற்றி பேசியுள்ளான் என்று.
இடைவெளி:
இன்று வேளாண்மையில் spacing என்று சொல்லக்கூடியதை. என் தமிழன் அன்றோ மிகசூட்சுமமாய் கூறியுள்ளான்.
” நெல்லுக்கு நண்டோட
வாழைக்கு வண்டியோட
தென்னைக்கு தேரோட
கரும்புக்கு ஏரோட”
இதற்கு இணங்க வேறு ஏதேனும் உண்டோ!
எதை எங்கே வளர்ப்பது?:
என் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எதை எங்கே வளர்த்தாள் எப்படி வளரும் என்பதை கூறுகின்றேன் கேளுங்கள்
“தென்னை ஓரம் திண்ணை வளர்த்தேன்;
தெருவோரம் புங்கை வளர்த்தேன்;
கொள்ளை ஓரம் கொய்யா வளர்த்தேன்;
சந்து ஓரம் வேம்பு வளர்த்தேன்;
மூளையிலே முல்லை வளர்த்தேன்;
வாசலிலே வாழை வளர்த்தேன்;
பிள்ளையில்லா குறை மறந்து-
பிள்ளை என எண்ணி வளர்த்தேன்;
தென்னை தேடித் தேனீ வந்தது;
கொய்யா தேடி அணில் வந்தது;
வேம்பு தேடி எல்லாம் வந்தது;
வாழை தேடி உறவு வந்தது;
என் உயிருக்கும் இனமான என் தமிழைத் தேடி அந்த வேளாண்மையே வந்தது”.
வருணணும் வருணிப்பும்:
ஒரு ஏழை விவசாயி தன் பயிர் வாடுவதைக் கண்டு வருணனிடம் வருணிக்கிறான். அது அவன் நடை அடுத்த வரும் கவிதையோ என் சொந்த நடை:-
“என் அன்பு மழையே என்னை கட்டித்தழுவ வருவாயோ;
என் அன்பு மழையே என்னை கட்டித்தழுவ வருவாயோ;
என் அன்பு மழையே உன் தழுவலை தேடி தவம் கிடக்கிறேன்;
என்னை கட்டித்தழுவ வருவாயோ;
என் அன்பு மழையே உன்னை கண்டு அந்தக் கதிரவனும் காணாமல் போக வேண்டும்;
என் அன்பு மழையை என் பயிர்களுக்கு நீர் சில இறைப்பாயோ;
என் பயிர்களைப் பார் வாடி வதங்கி நிற்கின்றது நீர் சில இறைப்பாயோ;
என் அன்பு மழையே!
நீர் சிலை இறைப்பாயோ!”.
பல்கலைக்கழகம்:
சான்று என்னும் ஒன்றுக்காக பல சான்றுகள் கூறிவிட்டேன் இத்துணை சான்றுகள் எதற்கு கடைசியாக ஒரே ஒரு சான்று கூறுகின்றேன் நமது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமே,
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்”
என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க செயல்படுகிறது என்றால் வேறு சான்றுகள் எதற்கு.
முடிவுரை:
“தாய் தந்தை இல்லா பிள்ளை எப்படியோ
குரு இல்லா சீடன் எப்படியோ
தெய்வம் இல்லா கோயில் எப்படியோ
தமிழ் இல்லா வேளாண்மையும் அப்படியே!”
” நீரின்றி அமையாது உலகு” என்றான் வள்ளுவன். நானோ “தமிழின்றி அமையாது உழவு” என்கிறேன்.
இப்படிக்கு:
ரா.நிதிஷ் கிருஷ்ணா