மனிதா நான் ஒரு மரணித்த மரம் பேசுகிறேன் கேள்.

மனிதா என் மூச்சுக் காற்றை நீ சுவாசித்தாய் உன் மூச்சு காற்றை நான் சுவாசித்தேன்.

நாம் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.

மனிதா உனக்கு காய் வேண்டுமா! கனி வேண்டுமா! சூரியன் சுட்டெரிக்கும் போது சற்று இளைப்பாற நிழல் வேண்டுமா! என் கிளைகள் வேண்டுமா! அல்லது என் இலைகள் வேண்டுமா! என்று என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் உனக்கு வெறும் ஒரு குடம் தண்ணீருக்காக கொடுத்தேன்.

ஆனால் மனிதன் உனக்கு வந்த பேராசையோ அல்லது எனக்கு தர வேண்டிய அந்த ஒரு குடம் தண்ணீருக்கு கூட நீ வக்கற்று போனாயோ நான் அறியேன்.

என்னை நீ வெட்டி வீழ்த்தினாய்.

மனிதா என்னை வெட்டும் போது கூட என்னை வெட்டாதே என்று கத்தியது உனக்கு கேட்கவில்லை.

நான் கத்தியதோ எனக்காக அல்ல மனிதா உனக்காக என்பதை நீ உணரவில்லை.

இப்போது மருத்துவமனையில் என் மூச்சின்றி உன் மூச்சு இயங்காது என்று அறிந்தும் நீ செய்த தவறை சமூக வலைதளத்தில் “status”ஆக 30 வினாடிகள் வைத்து எத்தனை பேர் எந்த நேரத்தில் அதைப் பார்க்கிறார்கள் என்பதை பார்க்கிறாயே தவிர இப்போதும் என் பிள்ளைகளான விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ நீ நடுவதற்கு முன்வரவில்லை.

மனிதா இறுதியாக எச்சரிக்கிறேன் நீ என் பிள்ளைகளான விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ பாதுகாத்து வளர்த்தாய் என்றாள் அவர்கள் உன் பிள்ளைகளை பாதுகாத்து வளர்ப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

நான் பேசியதை கேட்டாயா மனிதா இப்போது நீ ஒரு மரக்கன்றினை நடுவது போல் புகைப்படமெடுத்து 9080560609 என்னுக்கு “WhatsApp” மூலம் அனுப்பினால் என்னை கொன்ற உங்கள் பாவமும் உங்கள் முன்னோர்கள் பாவம் கங்கையில் கரைவது போல் கரைந்து போகும்.

இப்படிக்கு மரணித்த மரம்.

—ரா.நிதிஷ் கிருஷ்ணா.