நீங்கள் ஓர் வேளாண் மாணவரா? அல்லது வேளாண் துறையில் ஆசிரியராக உள்ளீர்களா? அல்லது வேளாண் துறை சார்ந்த பிற பணிகளில் பணிபுரிகிறிர்களா? அல்லது  வேளாண்மையை  விரும்புபவர்களா? அப்படி என்றால் இந்த தெரியுமா என்னும் தலைப்பை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதி முல்லை

என்னடா இவன் தெரியுமா என்ற தலைப்பை கொடுத்துவிட்டு அதற்கு கீழ் ஜாதி முல்லை செடியின் புகைப்படத்தை இணைத்து இருக்கிறான் என்று பார்க்கிறீர்களா. ஆம் இன்று நாம் ஜாதி முல்லை செடியில் ஒன்றை தெரிந்து கொள்ள போகிறோம் .

இதை ஆங்கிலத்தில் Jasminum grandiflorum  என்பார்கள் இது ஓர் பூ இனத்தைச் சேர்ந்த செடியாகும் இதிலிருந்து வரும் பூவினை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ள,இறைவனுக்கு வைக்க,வாசனை திரவியம் எடுக்க என பல பயன்பாட்டிற்கு உபயோகமாக உள்ளது இதுவரை அனைவருக்கும் தெரிந்ததை நான் கூறிவிட்டேன்.

அடுத்து நான் கூறப்போகும் செய்தியானது நூற்றில் 99 பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படியே அறிந்திருந்தாலும் அதை நேரில் கண்டு இருக்க வாய்ப்பில்லை அதாவது நான் எதை கூறுகின்றேன் என்றால் நாம் எல்லோரும் இந்த ஜாதி முல்லை செடியில் பூவை மட்டுமே கண்டிருப்போம். காயோ, கனியோ, விதையோ கண்டு இருப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு சிலருக்கு தெரிந்திருக்கலாம்,”இந்த செடியானது காய் கனி மற்றும் விதை தருமென்று” ஆனால் பலருக்கு இந்த செடி காய், கனி மற்றும் விதையினை தருகிறது என்று தெரியாமல் தான் இருக்கும் .

காய்

காரணம் நாம் இந்த செடியின் விதையை வைத்து இதன்  நாற்றுக்களை உற்பத்தி செய்வதில்லை அப்படியே நாம் விதையை வைத்து உற்பத்தி செய்யலாம் என்று முயன்றாலும் அந்த விதையின் முளைக்கும் திறன் குறைவு அதனால்  நாம் அதன் தண்டில் பல நாற்றுக்களை விளைய வைக்கிறோம் .

கனி

உண்மையில் இந்த ஜாதி முல்லை செடியானது காய் கனி மற்றும் விதையினை தரும். இதை நான் வெறும் வாய்மொழியாகவோ அல்லது பிறர் ஆராய்ச்சி செய்து கூறியதை வைத்தோ நான் கூறவில்லை என் வீட்டில் ஏழு வயது உடைய ஓர் ஜாதி முல்லை செடியானது உள்ளது அதிலிருந்து நான் பார்த்ததை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன்.

விதை

இதில் இணைத்து உள்ள அனைத்து புகைப்படமும் உண்மையானதே.