என்னை கவிதை எழுதச் சொன்னார்கள். சரி ;

கவிதை எனும் பேரரசி வருகைக்காக கையினிலே கோல் பிடித்து காத்திருந்த நேரமது; இந்த உலகம் என்னிடம் பேசிய கதை சொல்கிறேன் கேளுங்கள்;

உன்னைப் படைத்ததும் நானே;

நுண்ணுயிரைப் படைத்ததும் நானே;

பிற உயிரைப் படைத்ததும் நானே; 

விண்ணைப் படைத்ததும் நானே; 

மண்ணைப் படைத்ததும் நானே;

கடலைப் படைத்ததும் நானே;

காற்றைப் படைத்ததும் நானே;

ஆபரணத்தை படைத்ததும் நானே;

ஆபரணத்தை பார்த்து மக்களை பேராசைப்பட வைத்ததும் நானே;

ஆணும் பெண்ணும் சேர்ந்தே மற்றொரு ஆணையோ பெண்ணையோ படைக்க முடியும் என்ற விதியையும் எழுதியதும் நானே;

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து இன்பங்களுக்கும் காரணம் நானே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நானே;

ஓர் உயிர் இழந்தாலும் தாங்குவது நானே;

ஒரு உயிர் இறந்தாலும் தாங்குவது நானே;

உணவைப் படைத்ததும் நானே அதை மனிதனை உண்ணச் செய்ததும் நானே;

வருங்காலம் பார்க்க வரலாற்றைப் படைத்ததும் நானே;

அறிவியலை படைத்ததும் நானே;

அறிவியலை ஆழப்படுத்தியதும் நானே;

மனிதனை அறிவியலின் ஆழத்திற்கு எடுத்துச் சென்றதும் நானே;

மனிதன் அறிவியலின் ஆழத்தை முழுமையாக அறிய விடாமல் தடுப்பதும் நானே;

இது அனைத்தும் நான் செய்யும் விந்தை தானே;

என்று கூறி தன் சுழலும் பணியை செய்வதற்கு சுழன்றே செல்கிறேன் இதுவும் நான் செய்யும் விந்தை தான் என்று கூறி சென்றுவிட்டது.