கல்லூரியின் முதல்நாள்

நாங்கள் வருவதைக் கண்டு

வர்ணணோ மாரியை மாரி மாரி இறைத்தானாம்

இந்திரனோ சூரியனிடம் மாரியை மறைக்கச் சொல்லி கட்டளையிட்டான் 

மாரியை மறைக்க சூரியனோ தன் அக்னிச் சிறகுகளை விரித்தானாம்

காலனோ பத்தை குறித்தானாம்

அதாவது கடிகார முட்களோ பத்தைப் பார்த்தது

எனது அன்பு நூற்றி இருபது  முத்துக்களோ கல்லூரி நுழைவாயிலை பார்த்தது

நான்கு வருடம் நாளை போகும் என்றோர் கம்பீர குரல் எழுந்தது

ஒருங்கிணைப்பாளர்களோ ஒருங்கிணைந்தனர்

எமது மகிழ்ச்சியை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றி அமைத்தனர்

சற்றே ஓர் நொடியில் நூற்றி இருபது முத்துக்களும் ஐம்பத்து நான்கு, அறுபத்து ஆறு முத்துக்களாய் பிரிந்து விடுதியை சென்றடைந்தது

விடுதியில் விலையில்லா உறவினை பெற்றது

விடுதியில் விலையில்லா உறவினை பெற்றது

நாட்களோ நகர்ந்தது சிங்கமென்று பெயர் எடுத்தது

அண்ட சராசரங்களும் நடுங்கும்படி கர்ஜித்தது

நல்லதோரு நிலத்தில் விதைபட்டிருக்கிறோம் விருட்சமாய் வளர்வோம் என்றது

மாதங்கள் மறைந்தது மாதங்கள் மறைந்தது

முதல் பருவத்தினை முடித்தது

மறுநாளே மறு பருவத்திற்கு விதையினை விதைத்தது

விதைத்த விதையோ அறுவடைக்கு கம்பீரமாய் நிற்க

விதைத்த விதையோ அறுவடைக்கு கம்பீரமாய் நிற்க

அதற்கு முன் ஆசிரியர்களே

தங்களின் ஆசியை தங்களின் ஆசியை

எங்களுக்கு அன்புடன் நல்குவீர்களா??

கண்ணீர் மல்க காத்திருக்கிறோம்

எங்களுக்கு நல்குவீர்களா?? எங்களுக்கு நல்குவீர்களா??

இது அனைத்து நல் உள்ளம் படைத்த நல்லாசிரியர்களுக்கும் சமர்ப்பணம்

அன்புடன் விசார்டியன்ஸ் (wizardianz)