கல்லூரி முதல்வர்
என் அன்பு மனிதா! என் கல்லூரி முதல்வா!;
நீங்கள் கற்றுத் தந்த பாடங்கள் பல;
நான் அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் சில;
மாணவனின் சொல்லை முதல்வராய் இருப்பினும் முதன்மையாய் கருதுபவர் நீங்கள்;
நான்கு வருடம் நாளை போகும் என்று போதித்தவர் நீங்கள்;
திருக்குறளின் உணர்வும் உண்மையும் நீங்கள்;
பெற்றெடுத்தது தாயாக இருப்பினும், தத்தெடுத்தது தமிழ் அல்லவா! அந்தத் தமிழை அமிர்தமாய் எங்களுக்கு ஊட்டியவர் நீங்கள்;
முயற்சி என்னும் மூளையை எங்களுக்கு அளித்தவர் நீங்கள்;
எண்ணிலடங்கா திறமையை கரைத்துக் குடித்தவர் நீங்கள்;
வித்தாய் இருக்கும் மாணவனையும் விருட்சமாய் மாற்றுபவர் நீங்கள்;
என் கதவு எப்போதும் உனக்குச் சொந்தம் என்று எங்களை அன்புடன் அழைத்தவர் நீங்கள்;
அன்பை அறமாய் காட்டி; அன்பை அறமாய் காட்டி எங்களை பண்போடு வளர்த்தவர் நீங்கள்;
மூளையை விட முதுகெலும்பு முக்கியம் என்று உணர வைத்தவர் நீங்கள்;
நீங்கள் இருக்கும் வரை மாணவர்களின் மூச்சாய் இருந்து விட்டீர்கள்;
காலத்தின் கட்டாயம் எங்களை விட்டு விலகிச் செல்கிறீர்கள் நாங்களோ மூச்சு நிற்பதைப் போல் உணர்கிறோம் ……. ..
இது என் அன்பு முதல்வருக்கு மாணவர்கள் சார்பில் சமர்ப்பிக்கிறேன்.