எழுந்து வா இளைஞனே!!
கல்வியென்று நீ நினைத்தால் யாரும் அறியாதவற்றை பயின்றிடு!!
தொழிலென்று நீ சென்றால் புதுமையினை புகுத்திடு!!
காதலென்று நீ கொண்டால் கௌரவ கொலைகளை எதிர்த்திடு!!
கோபமென்று நீ கொந்தளித்தால் பெண்ணை தொடுபவனை துண்டித்திடு!!
உணவென்று நீ பிரியம் கொண்டால் உழவருடன் நின்றிடு!!
களவென்று நீ திரும்பினால் அயோக்கியன் முகமூடியை கவர்ந்திடு!!
நிம்மதியான வாழ்வொன்றை முதுமைக்காக வகுத்திடு!!
சிம்ம சீற்றத்துடனே இளமையை வென்றிடு!!