நான் திருடப்பட்டேன் 

நான் திருடப்பட்டேன், ஆம் நான் திருடப்பட்டேன். அறிவு என்பது அனைவருக்கும் பொதுவானதா அல்லது ஒருவருக்கு மட்டும் உரிமையானதா? 1995 ஆம் ஆண்டு W. R. கிரேச் என்னை திருடி அவன் காப்புரிமை பெற்றுக்கொண்டான். இருப்பினும் அவன் பிடியிலிருந்து இந்தியா என்னை மீட்டெடுத்து. 

நான் வேப்ப மரம் ( Azadirachta indica ). இதன் பொருள் இலவச மரம் . நான் இந்திய துணைகண்டத்திற்கு சொந்தமானவள். நான் பல தசாப்தங்களாக விவசாயம் மற்றும் மருத்துவத்தில் பெரும் பங்காற்றியுள்ளேன். இந்த அறிவு தலைமுறை தலைமுறையாக கடந்து வந்திருக்கிறது. அவன் திருடியது என்னையல்ல பல தலைமுறை மக்களின் அறிவை. ஆம் பூச்சிக்கொல்லியாக பயன்பட்ட என்னை அவன் கண்டுபிடித்ததாக கூறி திருடினான் ( Biopiracy – உயிரியல் திருட்டு) . நான் சுதந்திரம் அடைந்து விட்டேன். இலவச மரம் இலவசமாக. 

முட்டாள் மனிதன் என்னை அவன் என்னை சொந்தம் கொண்டாடுகிறான் . விலை பேசுகிறான். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை அவன் எனக்கு சொந்தமானவன் என்று. 

                                   இப்படிக்கு  

                                   இயற்கை